சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 26) ஒரு சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 88 குறைந்து ரூ.50,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 11 குறைந்து ஒரு கிராம் ரூ.6338-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.40 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 76-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமிற்கு 0.40 பைசா குறைந்துள்ளது. ஆனால் தங்கத்தை பொறுத்தவரை பெரியளவில் விலை குறையவில்லை. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்: ஜி.கே.வாசன் அறிவிப்பு!