சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 24) ஒரு சவரனுக்கு ரூபாய் 2௦௦ அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 25 அதிகரித்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 216 அதிகரித்து ரூ.50,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6349-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.40 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 76.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 76,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமிற்கு 0.40 பைசா அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலையானது இன்று ஒரு நாளில் மட்டும் ரூபாய் 200 அதிகரித்துள்ளது. எனவே நகை வாங்க நினைப்பவர்கள் அவசரம் காட்டாமல், சற்று நிதானித்து தங்கம் விலை குறையும்போது நகைகள் வாங்குவது நல்லது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயலலிதா பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!