சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 23) ஒரு சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து ரூ.46,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5 குறைந்து ரூ.5,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து ரூ.50,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 1 குறைந்து ஒரு கிராம் ரூ.6322-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.50 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 76-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியானது 2 நாட்களில் 2 ரூபாயும், தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் 16௦ ரூபாயும் குறைந்துள்ளது. எனவே மொத்தமாக நகை வாங்குவோர் மட்டுமின்றி சில்லறைகளில் நகை வாங்குவோரும், இந்த விலை இறக்கத்தை பயன்படுத்தி தேவையான நகைகளை வாங்கிக்கொள்ளலாம்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு: ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பகவந்த் மான்