சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 22) ஒரு சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூ.46,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து ரூ.50,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 15 குறைந்து ஒரு கிராம் ரூ.6323-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.70 பைசா குறைந்து, ஒரு கிராம் ரூ.76.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களிலேயே ரூபாய் 1.5௦ குறைந்துள்ளது. இதேபோல தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில், இன்று ஒரேயடியாக ரூபாய் 12௦ குறைந்துள்ளது.
எனவே மொத்தமாக தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு இந்த விலை இறக்கம் கைகொடுக்கும். இதேபோல சில்லறைகளில் நகை வாங்குவோரும் இந்த சமயத்தை பயன்படுத்தி நகைகளை வாங்கி கொள்ளலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
நினைவலைகளை மீட்டும் ‘ரோஜாக் கூட்டம்’!