சென்னையில் தங்கத்தின் விலை நேற்று (டிசம்பர் 5) சவரனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5975- க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 47,800-க்கும் விற்பனையானது. இந்த விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக அமைந்தது. குறிப்பாக, கடந்த 6 நாட்களில் சவரனுக்கு ரூ.1,500 அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (டிசம்பர் 5) சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.5,850-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ. 2.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 81.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.81,400 ஆகவும் விற்பனையானது.
பொதுவாக உலக அளவில் பங்குச் சந்தைகள் உட்பட முதலீடுகள் மோசமான வருமானத்தைக் கொடுத்தால் தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்புவார்கள். ஆனால் தற்போது உலக அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால் தங்கம் விலை அதிகரிக்கும். இதுவே இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றால் தங்கம் விலை குறையும். தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளதால் ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது.
இந்த நிலையில் இது, திருமண சீசன் கிடையாது என்பதால் மக்கள் தங்கம் வாங்குவதில் பெரிய ஆர்வம் செலுத்தவில்லை. மேலும், இன்னும் விலை குறையும் என்றும் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கற்பூரவல்லி கஷாயம்
கனவு,காதல், போராட்டம்.. ஷாருக்கானின் “டன்கி” ட்ரெய்லர் எப்படி?
மின்சார ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!