சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 19) சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 37,600 விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (அக்டோபர் 18) தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 37,640க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய விலையிலிருந்து இன்று சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 37,600 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 விலை குறைந்து ரூ. 4,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையோடு சேர்ந்து வெள்ளியின் விலையும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற்று 8 கிராம் வெள்ளி ரூ. 494.40க்கு விற்பனையானது. இன்று ரூ. 2.40 விலை குறைந்து ரூ. 492க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.30 விலை குறைந்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
இமாச்சல் தேர்தல்இமாச்சல் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
ஆறுமுகசாமிஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: ஸ்டாலின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?