gold and silver price

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் இன்று (பிப்ரவரி 9) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.96 விலை உயர்ந்து ரூ.43,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் விலை 43 ஆயிரத்தைக் கடந்தும் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று (பிப்ரவரி 8) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ.96 விலை உயர்ந்து ரூ.43,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.12 விலை உயர்ந்து ரூ.5,395-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.104 விலை உயர்ந்து 47,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.13 விலை உயர்ந்து ரூ.5,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தாலும் வெள்ளி விலை தொடர்ந்து 3வது நாளாக விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

முதல் முறையாக திருநம்பி, திருநங்கை தம்பதிக்கு குழந்தை

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு புகைப்படங்கள்: கொந்தளித்த டிஆர்கே கிரண்

+1
0
+1
3
+1
0
+1
4
+1
1
+1
3
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *