gold and silver price

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 27) சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.41,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் விலை கடந்த ஒரு வாரக் காலமாகவே தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (பிப்ரவரி 26) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ.72 குறைந்து ரூ.41,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.9 விலை குறைந்து ரூ.5,201-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 விலை குறைந்து ரூ.45,392-க்கும் ஒரு கிராம் ரூ.10 விலை குறைந்து ரூ.5,674-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 விலை குறைந்து ரூ.69,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 விலை குறைந்து ரூ.69-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

டெல்லி செல்லும் உதயநிதி ஸ்டாலின்: பிரதமருடன் சந்திப்பு!

ஈரோடு கிழக்கு: இன்றும் உலவும் வெளியூர்க் காரர்கள்-ஏன்?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
2
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *