gold and silver price

விலை குறைந்து வரும் தங்கம்: இன்றைய நிலவரம்!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 25) சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில தினங்களாகத் தங்கம் விலை குறைந்து வருவது மக்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று (பிப்ரவரி 24) 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.41.880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ.200 விலை குறைந்து ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 விலை குறைந்து ரூ.5,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.216 விலை குறைந்து ரூ.45,472-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.27 விலை குறைந்து ரூ.5,684-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்து வருகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.900 விலை குறைந்து ரூ.70,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி!

இறுதிகட்டத்தில் இடைத்தேர்தல் : மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

+1
7
+1
3
+1
4
+1
8
+1
6
+1
12
+1
4

Leave a Reply

Your email address will not be published.