சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 24) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை கடந்த சில தினங்களாகவே வீழ்ச்சியடைந்து வருகிறது. நேற்று (பிப்ரவரி 23) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.80 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 விலை குறைந்து ரூ.5,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.88 விலை குறைந்து ரூ.45,688-க்கும் ஒரு கிராம் ரூ.11 விலை குறைந்து ரூ.5,711-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.600 விலை குறைந்து ரூ.70,900-க்கும் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் விலை குறைந்து ரூ.70.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
உலக வங்கி தலைவர் பதவியில் இந்திய வம்சாவளி?
5000 கோடி பணம்… 5000கோடி சொத்து… ஜெ போட்ட பிளான்!