தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 23) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

நாளுக்கு நாள் விலை உயர்ந்து 44 ஆயிரத்தைத் தொடும் நிலையில் இருந்த தங்கம் விலை கடந்த சில தினங்களாகக் குறைந்து வருகிறது. நேற்று (பிப்ரவரி 22) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று (பிப்ரவரி 23) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 விலை குறைந்து ரூ.5,245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.264 விலை குறைந்து ரூ.45,776-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.33 விலை உயர்ந்து ரூ.5,722-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.500 விலை குறைந்து ரூ.71,500-க்கும் ஒரு கிராம் தங்கம் 50 காசுகள் விலை குறைந்து ரூ.71.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

தஜிகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share