சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 20) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை சனிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று திடீரென்று உயர்ந்தது. ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 19) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.80 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 விலை குறைந்து ரூ.5,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் சவரனுக்கு ரூ.88 விலை குறைந்து ரூ.46,080-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.11 விலை குறைந்து ரூ.5,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.100 விலை குறைந்து ரூ.71,700-க்கும் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் விலை குறைந்து ரூ.71.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
மயில்சாமி இறுதி ஊர்வலம் துவங்கியது!
‘ஆண்மை ஆராய்ச்சியாளர்’… எடப்பாடியை விமர்சித்த முரசொலி