சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 17) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த நான்கு நாட்களாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை 5வது நாளாக இன்று விலை குறைந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 16) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.240 குறைந்து ரூ.42,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 விலை குறைந்து ரூ.5,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.296 விலை குறைந்து ரூ.45,784-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.37 விலை குறைந்து ரூ.5,723-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.71,800-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
அத்துமீறிய நபரை வெளுத்து வாங்கிய ஃபிட்னஸ் மாடல்!
தமிழகம் வரும் திரவுபதி முர்மு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!