தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 16) ரூ.280 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கம் விலை அதிரடியாக உயரும் போது மக்கள் அதிர்ச்சியடைவதைப் போலத் தொடர்ந்து 4வது நாளாக விலை குறைந்து வருவதும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று (பிப்ரவரி 15) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ.280 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 விலை குறைந்து ரூ.5,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.304 விலை குறைந்து ரூ.46,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.38 விலை குறைந்து ரூ.5,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.200 விலை குறைந்து ரூ.71,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் விலை குறைந்து ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ஈரோட்டில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

திமுக பெண் கவுன்சிலர் மரணம்: முதல்வர் இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel