சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 15) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து 44 ஆயிரத்தை நெருங்கி மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாகத் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 14) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.120 விலை குறைந்து ரூ.42,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 விலை குறைந்து ரூ.5,315-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.128 விலை குறைந்து ரூ.46,384-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.16 விலை குறைந்து ரூ.5,798-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.500 விலை குறைந்து ரூ.72,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் விலை குறைந்து ரூ.72-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
பரபரப்பைக் கூட்டிய ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு!
40 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை: மீண்டும் நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு!