சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 14) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை தொடர்ச்சியாக 2வது நாளாகச் சரிந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 13) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.42,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.40 குறைந்து ரூ.42,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 விலை குறைந்து ரூ.5,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.48 விலை குறைந்து ரூ.46,512-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.6 விலை குறைந்து ரூ.5,814-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.500 விலை உயர்ந்து ரூ.72,500-க்கும் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் விலை உயர்ந்து ரூ.72.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
அதானி குழுமம்: பாஜக மீதான நேரடி குற்றச்சாட்டு – முதல்வர் மு.க. ஸ்டாலின்
அண்ணாவுக்குப் பின் நெடுஞ்செழியன் வந்திருந்தால்… ஈரோட்டில் சீமானின் முதலியார் டார்கெட்!