சென்னையில் இன்று (பிப்ரவரி 10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தொடர்ந்து விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 9) 22 கேரட் ஒரு சவரனுக்கு ரூ.43,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இன்று ரூ.440 குறைந்து ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.55 விலை குறைந்து ரூ.5,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
24 கேரட்
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.480 விலை குறைந்து 46,432-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 விலை குறைந்து ரூ.5,804-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 விலை குறைந்து ரூ.72,500-க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 விலை குறைந்து ரூ.72.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா