சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 4) சவரனுக்கு ரூ.640 விலை குறைந்து ரூ.42,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாகத் தங்கம் விலை உயர்ந்து 44 ஆயிரத்தைத் தொட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தது. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 3) விலை குறைந்து 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.43,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று (பிப்ரவரி 4) ரூ.640 விலை குறைந்து ரூ.42,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 விலை குறைந்து ரூ.5,335-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.696 விலை குறைந்து ரூ,46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.86 விலை குறைந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.1,800 விலை குறைந்து ரூ.74,200-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 விலை குறைந்து ரூ.74.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி: மின் இணைப்புடன் ஆதார்!
மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்!