சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 6) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த 2 தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து 45 ஆயிரத்தைக் கடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று (ஏப்ரல் 5) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.49,312-க்கும் ஒரு கிராம் ரூ.43 குறைந்து ரூ.6,164-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 குறைந்து ரூ.80,000-க்கும் ஒரு கிராம் 70 காசுகள் குறைந்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
7 வயது சிறுவன் பலி: நீச்சல் குளத்திற்கு சீல் வைப்பு!
புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் யூடியூபர் கைது!