சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 5) சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.45,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை விரைவில் 45 ஆயிரத்தைக் கடந்து விடும் என்று இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்த நிலையில் இன்று (ஏப்ரல் 5) ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை 1,240 ரூபாய் உயர்ந்துள்ளது.
22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.45,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.90 அதிகரித்து ரூ.5,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை ரூ.784 அதிகரித்து ரூ.49,656-க்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.98 அதிகரித்து ரூ.6,207-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,900 அதிகரித்து ரூ.80,700-க்கும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.90 அதிகரித்து ரூ.80.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
’அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே’: மேடையில் வருந்திய உதயநிதி
பல் பிடுங்கிய விவகாரம்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!