சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 28) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறு இறங்கு முகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 45 ஆயிரத்திற்கு மேல் விற்பனையாகி வந்த தங்கம் விலை இன்று 45 ஆயிரத்திற்குக் கீழ் சென்றுள்ளது. நேற்று (ஏப்ரல் 27) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.200 குறைந்து ரூ.80,000-க்கும் ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
இன்று தொடங்குகிறது சென்னை திருவிழா!
தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: வைரமுத்து வருத்தம்!