சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 24) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து உச்சத்தை தொட்ட நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு விலை குறைந்திருந்தது. நேற்று (ஏப்ரல் 23) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.80 அதிகரித்து ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து 5,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.49,000-க்கும் ஒரு கிராம் ரூ.10ன் அதிகரித்து ரூ.6,125-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.400 குறைந்து ரூ.80,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
எங்கள் நிறுவனத்துக்கும் திமுக முதல் குடும்பத்தினருக்கும் தொடர்பா?: ஜி ஸ்கொயர்