சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து 45 ஆயிரத்தைக் கடந்ததால் மக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் இன்று அட்சய திருதியை முன்னிட்டு பலரும் தங்கம் விலை குறையுமா என்று எதிர்பார்த்தனர். இதனையடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்து 44 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது.
நேற்று (ஏப்ரல் 21) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.48,920-க்கும் ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.6,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.900 குறைந்து ரூ.80,400-க்கும் ஒரு கிராம் 90 காசுகள் குறைந்து ரூ.80.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி55!
12 மணி நேர வேலை: பாஜக தயக்கம்… திமுக நிறைவேற்றம் – திருமாவளவன் கேள்வி!
Comments are closed.