சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (ஏப்ரல் 18) மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தினசரி தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் 45 ஆயிரத்துக்கு கீழ் செல்லவில்லை. நேற்று (ஏப்ரல் 17) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று இந்த விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48,864-க்கும் ஒரு கிராம் ரூ.6,108-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படும் நிலையில் வெள்ளி விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.1,100 குறைந்து ரூ.80,500-க்கும் ஒரு கிராம் ரூ.1.10 குறைந்து ரூ.80.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா