சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 13) சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.45,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை தினசரி உயர்ந்து 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று (ஏப்ரல் 12) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.45,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து ரூ.5,676-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.49,536-க்கும் ஒரு கிராம் ரூ.4 குறைந்து ரூ.6,192-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.81,800-க்கும் ஒரு கிராம் 40 காசுகள் அதிகரித்து ரூ.81.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
ஜூனியர் என்.டி.ஆருடன் வெற்றிமாறன் பேச்சுவார்த்தை!
தொடரும் தற்கொலைகள்: சென்னை ஐஐடியில் விடிய விடிய போராட்டம்!