தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 12) மேலும் 400 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று, 22 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ. 400 உயர்ந்து ரூ 45,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 5,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 6,131 ரூபாய்க்கும், ஒரு சவரன் 49,048 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 5,630 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45,040 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.81.40 க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 81,400க்கும் விற்பனையாகிறது.
தங்கம் வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நகை பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
அதானியை காப்பாற்றுகிறாரா மோடி? – காங்கிரஸ் கேள்வி!
கலாஷேத்ரா மீது நடவடிக்கை : மனித உரிமை ஆணையம் பரிந்துரை!