சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 11) சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில நாட்களாக அதிக ஏற்றத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை இரண்டு தினங்களாக குறைந்து வந்தது. ஆனால் இன்று மீண்டும் விலை உயர்ந்து 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று (ஏப்ரல் 10) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 அதிகரித்து ரூ.5,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.80,400-க்கும் ஒரு கிராம் 40 காசுகள் அதிகரித்து ரூ.80.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
காய்ச்சல் : அரசு மருத்துவமனையில் அமைச்சர்!
தனுஷின் புதிய படம்: ஜீ ஸ்டுயோவிடம் கொடுத்தது ஏன்?