சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 10) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து 45 ஆயிரத்தைக் கடந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில், விலை குறைந்து மீண்டும் 45 ஆயிரத்திற்குக் கீழ் சென்றுள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று ரூ.320 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 விலை குறைந்து ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்து ரூ.48,880-க்கும் ஒரு கிராம் ரூ.42 குறைந்து ரூ.6,110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.80,000-க்கும் ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
வைரலாகும் தர்ஷா குப்தாவின் பீச் க்ளிக்ஸ்!
‘ஓடிடி படைப்புகளுக்கும் சென்சார்’: சல்மான் கான்