தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 1) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து 45 ஆயிரத்தைக் கடந்துவிடும் என்று மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று (ஏப்ரல் 1) விலை குறைந்துள்ளது. நேற்று (மார்ச் 31) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையிலிருந்து இன்று ரூ.240 குறைந்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.77,700-க்கும் ஒரு கிராம் 20 காசுகள் அதிகரித்து ரூ.77.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் கட்டணம்!

வைக்கம் நூற்றாண்டு விழா: ஸ்டாலின் கேரளா பயணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment