சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 30) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தினசரி ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை நேற்று 47 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் 47 ஆயிரம் ரூபாயை கடந்து விடுமோ என்று நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.5,865-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.82,200-க்கும் ஒரு கிராம் ரூ.82.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சென்னை: சுரங்கப்பாதைகளில் மழை நீர் அகற்றம்!
ஐந்து மாநில தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியீடு!