சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 30) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை இறங்குமுகமாக உள்ளது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை 44 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை இன்று 43 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.5,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட்
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.46,776-க்கும் ஒரு கிராம் ரூ.33 குறைந்து ரூ.5,847-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 குறைந்து ரூ.76,000-க்கும் ஒரு கிராம் ரூ.1.50 குறைந்து ரூ.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
மேற்கூரை விபத்து: சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க்கிற்கு சீல்!
ஆசியாவின் சிறந்த நடிகர் டோவினோ தாமஸ்