சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 30) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் விலை ஏற்ற இறக்கத்துடனும், சில நாட்கள் விலை மாற்றமில்லாமலும் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று 2வது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.5,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியின் விலையும் சிறிதளவு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.78,000-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!
மலேரியாவுக்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்!