gold and silver price today 29-09-2023

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 29) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த 5 தினங்களாக குறைந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.47,040-க்கும் ஒரு கிராம் ரூ.522 குறைந்து ரூ.5,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்து வரும் வேளையில் வெள்ளி விலை உயர்ந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

சித்தா – விமர்சனம்!

ஆசிய போட்டிகள் 2022: இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0