சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 28) சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.46,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் விலையேற்றம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 46 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.46,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.65 அதிகரித்து ரூ.5,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள வேளையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.77,500-க்கும் ஒரு கிராம் ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சென்னை விமான நிலையத்தில் ஸ்வீட் பாக்ஸ்களுக்கு தடை: சுங்கத்துறை கெடுபிடி!
ODI World Cup 2023: பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல இன்னும் வாய்ப்பு உள்ளதா?