தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today 27-01-2024

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 27) சவரனுக்கு ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஆனாலும் ஆபரணத் தங்கத்தின் விலை 46 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாவது நகைப்பிரியர்களுக்கு கவலையை அளித்துள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,720-க்கும் ஒரு கிராம் ரூ.5,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படும் நிலையில் வெள்ளியின் விலை சிறிதளவு குறைந்துள்ளது,

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

கடலூர்: விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் விபத்து.. 3 பேர் பலி!

எங்க அப்பா சங்கி இல்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel