சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 25) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. இதனால் மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை எட்டிவிடுமோ என்று நகைப்பிரியர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 அதிகரித்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் 70 காசுகள் அதிகரித்து ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சேரன் இயக்கத்தில் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படம்?
கோவை: திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தற்கொலை!