சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 23) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.78,500-க்கும் ஒரு கிராம் ரூ.78.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மாநாடா..? திருமணமா..? கலகலத்த எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழா!
ஆயுத பூஜை: கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை!