சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இன்று (ஜனவரி 23) ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்து வந்தது. குறிப்பாக தங்கம் விலை மீண்டும் 47 ஆயிரம் ரூபாயை நெருங்கி கொண்டிருந்தது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று விலை மாற்றமில்லாமல் 22 கேரட் ஒரு சவரன் ரூ.46,640-க்கும் ஒரு கிராம் ரூ,5,830-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்பனையாகும் நிலையில் வெள்ளியின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.76,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.76.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா