சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 21) சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.45,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. மேலும் தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 46 ஆயிரம் ரூபாயை எட்டும் நிலையில் உள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.45,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.79,400-க்கும் ஒரு கிராம் 40 காசுகள் அதிகரித்து ரூ.79.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் அவகாசம்: மன்சூர் அலிகான் எச்சரிக்கை!
தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு!