gold and silver price today 20-12-2023

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 20) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 2வது நாளாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 அதிகரித்து ரூ.80,200-க்கும் ஒரு கிராம் 70 காசுகள் அதிகரித்து ரூ.80.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்: தயாரிப்பாளரின் திட்டத்திற்கு கமல் ஆதரவு!

நெல்லையில் மீண்டும் ரயில் சேவைகள் துவக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts