சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 2) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 3 தினங்களாக விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து 5,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் சிறிதளவு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.80,300-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் அதிகரித்து ரூ.80.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
திருச்சி வந்தடைந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு!
காவல் உயர் அதிகாரிக்கு பதவி உயர்வு… வரலாற்றுப்பழியில் திமுக : சீமான் எச்சரிக்கை!