சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 19) சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மீண்டும் 45 ஆயிரத்தை நெருங்கி வருவது நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.5,585-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.560 விலை உயர்ந்து, மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள வேளையில் வெள்ளி விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
ஐசிசி தரவரிசை: அதிரடியாக முன்னேறிய ரோகித் சர்மா… விராட் கோலி நிலை என்ன?