சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 18) சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.78,000-க்கும் ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
லியோவை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்
காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்: இஸ்ரேலின் வெறித்தனம்!