சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 18) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று 3வது நாளாக குறைந்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 குறைந்து ரூ.77,000-க்கும் ஒரு கிராம் 40 காசுகள் குறைந்து ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அலங்காநல்லூர் செல்லும் ஸ்டாலின் : அமீர் வைத்த முக்கிய கோரிக்கை!
சாதனைகளை அடித்து நொறுக்கிய ‘ரோகித் சர்மா’: பட்டியல் இதோ!