சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 17) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
சில தினங்களுக்கு முன்பு 43 ஆயிரத்திற்குக் கீழ் சென்ற தங்கத்தின் விலை இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் எதிரொலியாக மீண்டும் உயர்ந்தது.
இந்நிலையில் இரு தினங்களாகத் தங்கம் விலை குறைந்து வருகிறது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள வேளையில் வெள்ளியும் விலை கு குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.77,000-க்கும் ஒரு கிராம் ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிக் பாஸ் சீசன் 7: மீண்டும் சதி திட்டம் தீட்டும் மாயா? எஸ்கேப் ஆன விஷ்ணு
விக்ரம் படத்தை இயக்கும் சித்தா பட இயக்குநர்!