சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 16) சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
காசா – பாலஸ்தீனம் இடையேயான போர் எதிரொலியாக சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியது. பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை அதிகரித்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.77,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா