சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 14) சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த ஒரு வார காலமாக நீடித்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் விலை தற்போது ஏறுமுகமாக உள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் அதிரடி விலையேற்றம் நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தீபாவளி நெருங்கும் வேளையில் தங்கம் விலை மக்களை கவலையடைய செய்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள வேளையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கும் ஒரு கிராம் ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஆவேசமும் ரௌத்திரமும் கடந்து பொறுப்புணர்வுக்கு நகர்வோம்!
சாதனை படைத்த கேன் வில்லியம்சன்: பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!