சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 13) சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களாக இறங்குமுகமாக இருந்து வந்தது. ஆனால் நேற்று திடீரென்று தங்கம் விலை அதிகரித்தது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 2வது இன்றும் நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.5,845-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் சிறிதளவு உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ.78,000-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சந்தானத்தின் நான் ஸ்டாப் லூட்டி: வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர் எப்படி?
பெரியார், அம்பேத்கர் விருதுகள்: இன்று வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்