ரூ.46 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 12) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது. குறிப்பாக 2 வாரங்களுக்கு பிறகு இன்று ரூ.46 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் சிறிதளவு குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து ரூ.77,700-க்கும் ஒரு கிராம் 10 காசுகள் குறைந்து ரூ.77.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஷாருக்கான், விஜய் படங்கள்!
விஜய் ஹசாரே தொடர் 2023: அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு அணி!