சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 11) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை இறங்குமுகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் தங்கம் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.77,500-க்கும் ஒரு கிராம் ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்: படத்தின் டைட்டில் இதோ!
இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து ரஷீத் கான் விலகல்!
வேலைவாய்ப்பு : TNPL நிறுவனத்தில் பணி!
பொங்கல் பரிசு தொகையைப் புறக்கணிக்கும் விவசாயிகள்: காரணம் என்ன?